சாதி அதிகாரமும் அதிகார சாதியும்

ஒருமுறை ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் அளித்த பேட்டியில் தமிழ் இலக்கியச் சூழலை நொந்துகொள்ளும் விதமாகச் சில விஷயங்களைப் பேசினார். “ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்த ‘வெறும் நுரை மட்டும்தான்’ கதைபோல தமிழில் ஏன் எழுத முடியவில்லை? இந்தக் கதையில் வரக்கூடிய அதிகாரிபோல நிறைய பேரை நாம் பார்த்திருப்போம். சாதிச் சான்றிதழ் வாங்கும்போது, ரேஷன் கடைகளில், பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்கும்போது என நாம் சந்தித்த அதிகாரிகளில் ஒருவரைக்கூட ஏன் கதைகளில் கொண்டுவரவில்லை?” என்று பேசினார். இந்த ஆதங்கம் ஒருவகையில் … Continue reading சாதி அதிகாரமும் அதிகார சாதியும்

உங்கள் வீட்டுக்கே வருகிறது புத்தகக்காட்சி! – கே.எஸ்.புகழேந்தி பேட்டி

கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் புத்தகக்காட்சிகள் விரிவடைந்ததைப் பதிப்புத் துறை ஆரவாரத்தோடு வரவேற்றது. பெருவெள்ளம், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று அடுத்தடுத்து நெருக்கடிகளை எதிர்கொண்ட பதிப்புத் துறைக்குப் புத்தகக்காட்சிகள் ஆதரவாக இருந்தன. ஆனால், கரோனாச் சூழலில் ஈரோடு, மதுரை, கோவை, நெய்வேலி என்று அடுத்தடுத்து புத்தகக்காட்சிகள் ரத்தாகின. சிறிய அளவிலான புத்தகக்காட்சிகளைக்கூட நடத்த முடியாமல்போனது. இந்நிலையில்தான் இணையம் வழியாகப் புத்தகக்காட்சி நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் நம் பதிப்பாளர்கள். நவம்பர் ஆரம்ப வாரங்களில் மெய்நிகர் புத்தகக்காட்சி தொடங்கவிருக்கிறது. இந்த … Continue reading உங்கள் வீட்டுக்கே வருகிறது புத்தகக்காட்சி! – கே.எஸ்.புகழேந்தி பேட்டி

‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா?

இது எல்லாவற்றையும் தொகுத்துப்பாருங்கள். ‘வெள்ளைக்காரர்கள் விட்டுச்சென்ற முப்பத்து ஆறாயிரம் கண்மாய்களைத் திராவிடக் கட்சிகள் அழித்த கதையைப் பேசுகிறேன்’ என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் ‘சூல்’ நாவலுக்குக் கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. சோ.தர்மன் அதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ மதப் பிரிவினரைப் பின்புலமாகக் கொண்டு – குறிப்பாக, கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள், மடங்கள் போன்றவற்றை மிகக் கடுமையாக விமர்சிக்கும் விதமாக ‘பதிமூனாவது மையவாடி’ நாவலை எழுதுகிறார். ஜெயமோகன் முன்னுரை எழுதுகிறார். ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிடுகிறது. நாவலின் கதைசொல்லி … Continue reading ‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா?

எப்போது விடுதலை?

ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார். இந்த வரிசையில் … Continue reading எப்போது விடுதலை?

தலித்துகள் இன்று

ஆய்வாளரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே இந்தியாவின் சாதி அமைப்பு குறித்துத் தீவிரமாக எழுதிவரும் ஆளுமை. டெல்டும்டேவின் எழுத்துகளில் பலவும் ஏற்கெனவே தமிழுக்குக் கொண்டுவரப்பட்டு நமது உரையாடல்களில் முக்கியப் பங்காற்றுவதாக இருக்கின்றன. கமலாலயன் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘மஹத்: முதல் தலித் புரட்சி’ (என்சிபிஹெச் வெளியீடு), ச.சுப்பாராவ் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘சாதியின் குடியரசு’ (பாரதி புத்தகாலயம்) ஆகிய டெல்டும்டேவின் புத்தகங்கள் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை. அந்த வரிசையில், சாதியின் தோற்றுவாய், தலித்துகளின் எழுச்சி தொடங்கி அவர்களது இன்றைய … Continue reading தலித்துகள் இன்று

சமூகத்துக்கும் சினிமாவுக்குமான ஊடாட்டம்

தமிழகத்தில் சினிமா என்பது திருவிழா போன்றது. சாமானியர்களை அவர்களுடைய அன்றாடக் களைப்பிலிருந்து விடுவிக்கும் கொண்டாட்டமாக சினிமா இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் வரலாற்றை சினிமாவோடு பொருத்திப் பார்க்கும்போது அதை நாம் வெறும் பொழுதுபோக்காக மட்டும் கடந்துவிட முடியாது. மிக முக்கியமாக, அறிவுச் செயல்பாட்டோடு தொடர்பில்லாமல் இருப்பவர்களுக்கான சிந்தனை முறையை உருவாக்கிக்கொடுப்பதில் சினிமாவின் பங்கு கணிசமானது. அதனால்தான், பெரும்பாலான சமூகப் பிரச்சினைகள் குறித்துப் பேசும்போது, அங்கே தவிர்க்க முடியாமல் சினிமாவைக் கொண்டுவருகிறோம். எண்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களைச் சமூக, அரசியல் … Continue reading சமூகத்துக்கும் சினிமாவுக்குமான ஊடாட்டம்

ராமகிருஷ்ணன்: தடையற்ற தமிழ்ச் சக்கரம்!

ஓவியம்: எம்.சுந்தரன் முதன்முறை ‘க்ரியா’வில் நான் ராமகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றபோது, என் கையில் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய ‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’ புத்தகம் இருந்தது. ‘ஜோனதன் கேப் பதிப்பகம்’ வெளியிட்ட கெட்டி அட்டைப் பதிப்பு அது. புத்தகத்தை வாங்கிப் பார்த்தார் ராமகிருஷ்ணன். ஜோனதன் கேப், எடித் கிராஸ்மனைப் பற்றிப் பேசியவர், கெட்டி அட்டைப் பதிப்புக்கு நம் ஊரில் இருக்கும் மதிப்பு குறித்தும் பேசினார். நான் யாரையெல்லாம் வாசித்திருக்கிறேன், அவர்களைப் பற்றிய என்னுடைய … Continue reading ராமகிருஷ்ணன்: தடையற்ற தமிழ்ச் சக்கரம்!

ஈருடல்காரன்!

பத்திரகாளி கோயில் தேர்த் திருவிழா நாளில் ஒரு பெண் மீது ஆசைப்பட்டு ஒருவன் காளியிடம் வேண்டுகிறான்: ‘அந்தப் பெண் என்னை மணந்துகொண்டால் என் தலையை உன் பாதார விந்தத்தில் செலுத்துகிறேன்.’ அவன் வேண்டியது நடக்கிறது. சொன்னபடி, கோயிலுக்கு எதிரில் இருக்கும் மரத்தின் கிளையில் முடியை முடிந்துகொண்டு கழுத்தை அறுத்து மாய்ந்துபோகிறான். அவனைத் தேடிவரும் அந்தப் பெண்ணின் சகோதரன், பிரேதத்தைக் கண்டு வருந்தி அவனும் அதேபோல தலையைத் துண்டித்துக்கொள்கிறான். தமையனும் கணவனும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அந்தப் பெண்ணும் … Continue reading ஈருடல்காரன்!

இந்தியாவைப் பீடித்திருக்கும் வதந்தி நோய்!

இட்டுக்கட்டப்பட்ட கதைகள் ஒன்றும் புதிய விஷயமல்ல. அச்சுப் புத்தகங்களில்கூட தவறான அல்லது இல்லாத ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி திரித்து எழுவது வரலாறு நெடுக இருக்கிறது. பின்பு, அந்தத் தவறான தகவல்கள் வேறுவேறு இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டு, அதுவே உண்மை என்பதாக உலவத் தொடங்கிவிடும். அப்படியான விஷயங்கள் நம் சமூக வலைதள யுகத்தில் மேலும் சிக்கலானதாக மாறியிருக்கின்றன; ஒருவித நோய்மையாகப் பீடித்திருக்கின்றன. சமூக வலைதளங்கள் உருவாக்கியிருக்கும் புதிய களம், இந்த வதந்திகளை எப்படியான மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன என்பதை வெளிக்கொண்டுவருகிறது … Continue reading இந்தியாவைப் பீடித்திருக்கும் வதந்தி நோய்!

ராஜம் தற்கொலைக்கு யார் காரணம்?

எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு இது. நாவல்களாலேயே (‘காதுகள்’, ‘வேள்வித் தீ’, ‘நித்ய கன்னி’) அவர் இன்றைய தலைமுறையால் அடையாளம் காணப்படும் சூழலில் அவரது கிளாஸிக் கதைகளில் ஒன்றை வாசித்துப்பார்க்கத் தோன்றியது. முன்னோடிகளை நினைவுகூர்ந்து புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் சமகாலப் படைப்பாளிகள் பலரும் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ கதையை எம்.வி.வெங்கட்ராமின் மிகச் சிறந்த கதையாக மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கதையைப் பற்றி எழுதியவர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் அம்மா பாத்திரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; அம்மா பாத்திரத்தைக் குறிப்பிடாமல் ‘பைத்தியக்காரப் பிள்ளை’யைப் பேசிவிட முடியாதுதான். ஆனால், அவர்களில் … Continue reading ராஜம் தற்கொலைக்கு யார் காரணம்?