விநோதமான நான்கு காதல் கதைகள்

தமிழ்ப் புனைவெழுத்தில் புதுமையான வடிவ உத்திகளில் அசாத்தியமான படைப்புகளை வெற்றிகரமாக சாத்தியமாக்கியவர் பா.வெங்கடேசன். வடிவ உத்திகளில் விதவிதமான முயற்சிகளை மேற்கொண்டவர்களாகப் பலரை நாம் பட்டியலிட முடியும் என்றாலும், பெரும்பாலானவை பரிசோதனைகளாக நின்றுவிடுகின்றன. கலையம்சம் கூடிய படைப்பாக முழுமை பெற்றவர்களில் பா.வெங்கடேசன் குறிப்பிடத்தக்கவர். நிறுத்தற்குறிகளற்ற மிக நீண்ட வாக்கியங்கள், ஏழெட்டு பக்கங்கள் நீளும் பத்தி, நீளமான வார்த்தைக்கோவை, உரையாடல்களற்ற கதைசொல்லல் முறை, எண்ணற்ற அடைப்புக்குறிகள், அடைப்புக்குறிக்குள் அடைப்புக்குறிகள் எனப் புனைவுமொழியில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டவர். ஒருமுறை பா.வெங்கடேசனை … Continue reading விநோதமான நான்கு காதல் கதைகள்

பாகீரதியின் மதியம்: ‘ட்ராகுலாவின் நாட்குறிப்புகள்’

கலையென்பது மிகைப்படுத்தல், தத்ரூபமல்ல. [பக்: 133]  காதல் என்பது அற்புதங்களின் உலகம். அங்கே நோவுகள் உண்டு, ஆனால் வியாதிகள் கிடையாது, பொறுப்புகள் உண்டு, ஆனால் சுமைகள் கிடையாது, பலவீனங்கள் உண்டு, ஆனால் இயலாமை கிடையாது, ஊடல்கள் உண்டு, ஆனால் சலிப்போ களைப்போ கிடையாது, நெருக்கம் உண்டு, உறவு கிடையாது, உடலோடு ஸ்பரிசம் உண்டு, ஆனால் உடலோடு புழங்குவது கிடையாது, முக்கியமாக, நினைவுகள் உண்டு, பிரக்ஞை கிடையாது, யதார்த்தத்தின் மீது தான் கட்டப்படுகிறதெனினும் காதல் யதார்த்தத்தை மீறிய, சொல்லப்போனால் … Continue reading பாகீரதியின் மதியம்: ‘ட்ராகுலாவின் நாட்குறிப்புகள்’