குதிரை வேட்டை | பெர் பெதர்சன் | தமிழில்: யுவன் சந்திரசேகர்

நாவலின் தொடக்கம்; ‘நவம்பர் ஆரம்பம். ஒன்பது மணி. டிட்மௌஸ் பறவைகள் ஜன்னலில் மோதுகின்றன. மோதியதன் விளைவாக, சில வேளை கிறங்கிப் பறக்கின்றன. பிற வேளைகளில், புதுப் பனியில் வீழ்ந்து தவிக்கின்றன – மீண்டும் எழுந்து பறக்க இயலும்வரை. என்னிடமுள்ள எது அவற்றுக்கு வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஜன்னல் வழியே தெரியும் கானகத்தைப் பார்க்கிறேன். ஏரியின் அருகே உள்ள மரங்களுக்கு மேலாக சிவப்பு நிற வெளிச்சம் தெரிகிறது. காற்று வீசத் தொடங்குகிறது. நீர்ப்பரப்பின்மேல் காற்றின் வடிவத்தைக் காண முடிகிறது எனக்கு’.

per_petterson-0311

மழை பொழிந்த மாலை வேளையில் எவ்வித சிந்தனைக்கும் ஆட்படாமல் வெறுமனே வேடிக்கை பார்ப்பதை போன்று மிக ரம்மியமான வாசிப்பைத் தரும் நாவல்கள் வெகு சொற்பமே. கதையால் அல்லாமல் கதைசொல்லும் பாணியினால் இதை சாத்தியமாக்கியவர்கள் அதிலும் சிலரே. ‘குதிரை வேட்டை’ அவ்வெகுசொற்பங்களில் ஒன்று. கதைசொல்லியின் நினைவுகளாலும் நனவுகளாலும் – காலத்திலும் – முன்னும் பின்னும் கோர்க்கப்பட்ட நாவல். மிகக் கூர்ந்த வாசிப்பைக்கோரும் இந்நாவிலின் உச்சபட்ச வாசிப்பின்பம் மறுவாசிப்பிலேயே கிட்டும் என்பது என் எண்ணம். வர்ணனை, உரையாடல், சம்பவங்களின் சித்தரப்பு, எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடு என அனைத்திலும் வெகு நிதானமான தொனியினால் கிரக்கம்கொள்ளச் செய்கிறார் பெர் பெதர்சன். யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்புக்கும் மிகப்பெரும் பங்குண்டு.

14938196_1108555009199049_2277816899928826815_n
காலவரிசைப்படி நாவலின் சம்பவங்களை விக்கியில் தொகுத்திருக்கிறார்கள்; அதை வாசிப்பது குதுகலமானதோர் அனுபவம்.

Wiki link: https://en.wikipedia.org/wiki/Out_Stealing_Horses

தலைப்பைப் பார்த்து இதுவொரு சாகசக்கதை என்றெண்ணியே வாசிக்கத் தொடங்கினேன். கதைக்களம், கதைசொல்லும் பாணி என நான் நினைத்திருந்ததற்கு ஒரு சதவிகிதம் கூட எவ்விதத்திலும் சம்பந்தமில்லை.

168728_108032095940167_7282090_n

‘நாவல்ல landscape ரொம்ப முக்கியம’ என்பார் நண்பரொருவர். இந்நாவல் அவர் கையில் சிக்கினால் கொண்டாடித் தீர்ப்பார்!

‘எது எப்போது துன்புறுத்தும் என்பதை நமக்கு நாமேதான் தீர்மானித்துக்கொள்கிறோம்’; நாவலின் இறுதி வரி.

Leave a comment