சாபக்காடு – 2017

புத்தக அலமாரியில் இருந்து வாசிப்பதற்காக ஒன்றைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னால் சுவாரசியமான ஏதோ ஒரு விஷயம் நிச்சயம் இருந்திருக்கிறது. ‘நினைவுதிர் காலம்’ வாசித்து முடிக்கையில் அது ‘மோக முள்’ளைக் கையில் எடுக்கச் சொல்லும். வண்ணநிலவனை வாசிக்கத் தொடங்கினால், அவர் ‘பாரபாஸை’ நோக்கி திசைதிருப்பி விடுவார். ‘பாட்டியின் குரல்வலையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்’ வாசித்தவர்களால் ‘நிச்சலன’த்தைத் தவிர்க்க முடியாது. இவை தவிர தவிர்க்க முடியாத பரிந்துரைகள் ஏராளம். இப்படி எந்தக் குறிப்பிட்ட திட்டங்களுமில்லாமல் தொடர்பின்றி நிறைய வாசித்திருக்கிறேன் இவ்வருடம். அவற்றுள் சில படைப்புகள் குறித்து விரிவாக எழுதியுமிருக்கிறேன்.

இவ்வருடம் எழுதியவற்றுள் பத்து கட்டுரைகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.

சிலேட் தளத்திற்காக ஓரான் பாமுக் வழங்கிய நேர்காணலின் மொழிபெயர்ப்பு:

‘எனது நாட்டைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்குவதற்காக நான் எழுதுவதில்லை’

https://saabakkaadu.wordpress.com/2017/12/26/pamuk-interview-slate/

ஜீ. முருகனின் ‘கண்ணாடி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுதிய விமர்சனக் கட்டுரை:

பகடிக் கண்ணாடியில் நஞ்சின் பிம்பம்

https://saabakkaadu.wordpress.com/2017/12/25/kannaadi/

சு. வேணுகோபாலின் ‘பால்கனிகள்’ குறித்த விமர்சனப் பார்வை:

புறக்கணிக்கப்படும் ஜீவனின் துயரார்ந்த கூக்குரல்

https://saabakkaadu.wordpress.com/2017/11/06/paalkanigal/

One of my favorite articles! ஜான் பான்வில்லின் ‘கடல்’ குறித்து:

இரண்டாவது இதயமாகத் துடிக்கும் கடந்தகாலம்

https://saabakkaadu.wordpress.com/2017/09/19/kadal-john-banville/

பா. வெங்கடேசன்! எப்போதும் வியக்கும் கலைஞன். அவரது ‘பாகீரதியின் மதியம்’ குறித்து:

‘ட்ராகுலாவின் நாட்குறிப்புகள்’

https://saabakkaadu.wordpress.com/2017/09/18/bagirathiyin-mathiyam/

இக்கட்டுரையில் புதிதான பார்வை எதுவுமின்றி உள்ளதை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும் கோபிகிருஷ்ணனை முழுதாக வாசித்தது பேரனுபவம்:

விசித்தர மனதின் புதிர் குணம்

https://saabakkaadu.wordpress.com/2017/09/18/gobikrishnan-padaipugal/

தமிழில் வெளியான பாமுக்கின் மூன்று நாவல்கள் குறித்தும் ஒரு சிறிய அறிமுகம்:

ஓரான் பாமுக் படைப்புகள் – ஓர் அறிமுகம்

https://saabakkaadu.wordpress.com/2017/03/24/orhan-pamuk-intro/

சரவணன் சந்திரனின் ‘அஜ்வா’ நாவலை முன்வைத்து எழுதப்பட்டது எனினும், சமகாலப் பிரதிகளில் தென்படும் மொழி அலட்சியம் குறித்த கட்டுரையாக இதைக் கருதலாம்:

சரவணன் சந்திரனின் ‘அஜ்வா’

https://saabakkaadu.wordpress.com/2017/02/28/ajwa/

உயிரோடை மற்றும் காலச்சுவடு இணைந்து நடத்திய சிறுகதைப் பயிலரங்கம் – அப்சர்வேஷன்:

சிறுகதைப் பயிலரங்கம் – 2017

https://saabakkaadu.wordpress.com/2017/02/21/workshop-feb-2017/

பிரான்சிஸ் கிருபாவுடனான எனது முதல் உரையாடல்:

தாய் தந்த முத்தம்

https://saabakkaadu.wordpress.com/2017/02/01/thaai-thantha-muththam/

O

வாசிப்பிற்கு நிகராக நிறைய சினிமாக்களும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சமகால இயக்குனர்களின் பட்டியலை நண்பர்களிடமிருந்து பெற்றேன். Lars von Trier, Nicholas Winding Refn, Nuri Bilge Ceylon, Martyn McDonagh, Wong Kar Wai, Apichatpong Weerasethakul ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சிலர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சில தனித்த அடையாளங்களை மேலோட்டமாக அணுகினாலே இனங்காணமுடிகிறது.

எத்தனையோ நாவல்களையும் சிறுகதைகளையும் வாசிக்கிறோம். அவற்றில் பலவற்றை வெகு இயல்பாக நம்மால் கடந்து போக முடிகிறது. ஏதோ ஒரு படைப்பு நம்மை வியப்பிலாழ்த்துகிறது. பிரமிக்க வைக்கிறது. மகிழ்ச்சியடைகிறோம். அது மனதிற்கு நெருக்கமான படைப்பாகிறது. கொண்டாடுகிறோம்.

இதுவரை நாம் அறிந்திராத ஒன்று, அறிந்த ஒன்றின் வேறொரு பரிமாணம், அசாத்தியமான ஒன்றை சாத்தியப்படுத்தியிருப்பது என ஏதொவொரு புதுமையான அம்சம் நம்மை இத்தகைய பிரமிப்பிற்குள் இட்டுச்செல்கிறது. ஓரிரு நாட்களில் அப்பிரமிப்பு விலகி அதன் நுட்பங்களை உணர்கையில் அதற்கான தனித்த இடமொன்றை ஒதுக்கித் தருகிறோம்.

மிகக் கொடுமையான வறுமையிலும் உறவுகளுக்குள்ளே தளிர்விடும் அன்பைக் கலையாக்கியவர் வண்ணநிலவன். தான் அனுபவித்த, பார்த்த சொந்த அனுபவத்தைப் பகடிக்குள்ளாக்கி சமூக அமைப்பையும் கலாச்சாரத்தையும் மதத்தையும் மனித மனங்களின் வாயிலாக விமர்சித்தவர் கோபிகிருஷ்ணன். கொடுந்துயரையும் வலியையும் பேரானந்தமாக்கியவர் பிரான்சிஸ் கிருபா. சமூகம் அங்கீகரிக்க மறுக்கும் உறவுகளின் காதலை அவ்வுறவின் மகத்துவத்தைப் படைப்பாக்கியவர் தி. ஜானகிராமன். மீஸான் கற்களில் குஞ்ஞப்துல்லா படைத்திருக்கும் மாந்தர்கள், பேரதிசயம். தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், சமகால அரசியல் சமூக அவலங்களை மாயத்தன்மையுடன் புனைவாக்கியிருக்கும் குமார் அம்பாயிரம் ஒரு பிரத்யேகமான படைப்பாளி. பா.வெங்கடேசன் உருவாக்கியிருக்கும் புனைவுலகமும் மொழியும் அசாத்தியமானது, அவருக்கே உரித்தானது.

இதுவரை ஆயிரம் பிண்ணனிப் பாடகர்களைத் தமிழ்த் திரையுலகம் கண்டிருக்கிறது. காலத்தில் அழியாமல் நம் நினைவில் நிற்பவர்கள் வெகு சொற்பமே. தனித்த அடையாளமே ஒரு படைப்பை அல்லது கலைஞனை காலத்தில் நிலைத்திருக்கச் செய்கிறது அல்லது அதற்கான விஷேச இடத்தைப் பெற்றுத்தருகிறது. தனக்கான தனித்துவத்தை நோக்கியதாகவே ஒரு கலைஞனின் பயணமிருக்குமென நம்புகிறேன். பெரிதாக அதில் ஜொலிக்கவில்லையென்றாலும் தோல்வியுற்றாலும் புறந்தள்ளப்பட்டாலும் கூட ‘தனித்துவம்’ என்ற ஒன்றாவது மிச்சமிருக்கும்.

அப்படி, இவ்வருடம் வாசித்தவற்றில் மிகச் சிறந்த படைப்பாக நான் கருதும் புத்தகங்கள் (நினைவிலிருந்து..):

  1. பாகீரதியின் மதியம் – பா. வெங்கடேசன்
  2. ஈட்டி – குமார் அம்பாயிரம்
  3. இருமுனை – தூயன்
  4. கறுப்பு வெள்ளைக் கடவுள் – தேவிபாரதி
  5. கரமுண்டார் வூடு – தஞ்சை ப்ரகாஷ்
  6. எம். ஜி. ராமச்சந்திரனும் கார்ல் மார்க்ஸூம் – பாலை நிலவன்
  7. கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் – சிவசங்கர் எஸ். ஜே.
  8. கோபிகிருஷ்ணன் படைப்புகள்
  9. மாமிசம் – தமிழில்: ரவிக்குமார்
  10. மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்ஞப்துல்லா
  11. கடல் – ஜான் பான்வில்
  12. குதிரை வேட்டை – பெர் பெதர்சன்
  13. விசாரணை – பிரான்ஸ் காஃப்கா
  14. முதல் மனிதன் – ஆல்பர் காம்யூ
  15. A Strangeness in My Mind – Orhan Pamuk

Leave a comment